Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த நபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவிலில் உள்ள மணி, குத்து விளக்குகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் மருதையான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலிருந்து  இரண்டு பித்தளை குத்து விளக்கு, நான்கு  வெண்கல மணி ஆகியவற்றை  ஒருவர் திருடி சென்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து பாடலூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவலறந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரித்த போது, அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் இந்திராகாலனியில் வசித்து வரும் பெரியசாமி என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |