கோவிலுக்குள் வைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் பூசாரியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் கோவிலுக்கு சென்று சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து கொண்டிருந்த போது முக கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் சரவணன் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூசாரியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.