கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதவலாயம் அருகில் இருக்கும் சோழபுரத்தில் சுடலைமாடசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அந்தக் கோவிலின் வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் உடனே கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு மர்ம நபரின் உருவம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.