சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பசவனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரப்பா என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரப்பாவை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.