கர்நாடகாவில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில் அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா (வயது 28)மனைவி அமுதா(வயது 24) .(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், அந்த வாலிபர்கள் அப்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பெண்ணின் கணவர் ,வாலிபர்களை கோபமாக தாக்கியுள்ளார். இதனால் அந்த 6 பேர் கொண்ட கும்பல், இவரை பயங்கரமாக தாக்கி அந்த பெண்ணின் சேலையை உருவி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் பெண்ணின் கணவர் காயம் ஏற்பட்டதால் உதவிக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தார். அப்பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அப்பெண்ணையும், கணவரையும் காப்பாற்றினர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட இருவரும் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 5 பேரை கண்டுபிடித்து கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவரும் அதே பகுதியை சேர்ந்த யோகேஷ் (வயது 24), மனு (வயது 24), சிவகுமார் (வயது 24), சந்தோஷ் (வயது 28) மற்றும் சசிகுமார் (வயது 29) என்பது தெரிந்தது. அதோடு தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.