விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாராஷ்டிராவில் இருக்கும் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
https://www.instagram.com/p/CVNJHP1BtHK/
இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். மேலும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர், மும்பதேவி கோவில், மகாலட்சுமி கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று வழிபட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.