Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று வந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் மெயின் ரோடு கீழத்தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் இறந்து விட்டதால் அவரது மனைவி செண்பக வடிவு(84) உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று செண்பக வடிவு அருகில் இருக்கும் சுடலைமாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மூதாட்டி வீட்டிற்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுனரான ராதாகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |