Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற இளைஞர்…. “ஆற்றில் குளிக்கும் போது நேர்ந்த சோகம்”…. போலீசார் விசாரணை….!!!!!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி கதவணையின் இரண்டாவது மதகு பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின் பிணமாக கிடந்த இளைஞர் யார் என விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பது தெரிந்தது. இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சிப்காட்டில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றியதும் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஆற்றில் குளித்த பொழுது அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பின் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |