மோட்டார் சைக்கிள் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்மாசி தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தென்னிலை அருகே இருக்கும் பேக்கரியில் டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக ரங்கம்மாள் கரூர்- கோவை சாலையை கடந்து சென்ற போது கந்தசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீது கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.