நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணபதி தனது குடும்பத்தினருடன் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மேடத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வேகமாக காரில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று தீயில் கருகிய காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.