Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதி….. வாலிபர்கள் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி….!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே இருக்கும் பாம்பாலம்மன் கோவிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடமிருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து பலனியப்பன் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருநெல்வேலியைச் சேர்ந்த பெரியசாமி(28), பேச்சு முத்து(27) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் பணம் மற்றும் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொரு வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |