Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிலர் சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கதம்ப வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் கந்தசாமி(59), பாலகிருஷ்ணன்(19), அழகுபிள்ளை(33) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கதம்ப வண்டுகளை அழித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |