கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை பூசாரி கோவிலுக்கு சென்றுள்ளார்க்ஷ அப்போது மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அந்த உண்டியலில் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,