கோவிலுக்கு சென்ற பெண்களை கிண்டலடித்ததை தட்டி கேட்டதால் வாலிபர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுதியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் வசித்து வரும் 3 இளம் பெண்கள் அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசித்து வரும் கார்த்திக், பெரியசாமி, பூவரசன் மற்றும் ராகுல் ஆகியோர் அந்த பெண்களை கிண்டலடித்துள்ளனர்.
இதுகுறித்து தெருவிலுள்ள சில வாலிபர்களிடம் அந்த பெண்கள் கூறியுள்ளனர். உடனே அந்த வாலிபர்கள் அவர்களிடம் கேட்டபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராகுல் உட்பட 13 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.