தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழந்தை அம்மாள் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி-யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.