Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மகன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் முல்லை நகரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக  வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இவருடைய மகன் அஜித்துக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அஜீத் தன்னுடைய மனைவியுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஐயப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அஜித் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது  ஐய்யப்பன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அஜித் தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |