வெயிலின் தாக்கத்தால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் ஆண்டார்குப்பத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் இந்நிலையில் வெயில் அதிகமாக இருந்ததால் முதியவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.