Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலுக்கு சென்ற மூதாட்டிகள்…. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே நாகலாபுரத்தில் புகழ்பெற்ற வல்லப விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த சரசு சென்றுள்ளார். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் சரசுவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரசு கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதேப்போன்று கோவிலுக்கு வந்த திண்டிவனம் பகுதியை தவமணிதேவி என்பவரிடமும் 6 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டிவனம் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |