மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபன் தனது சகோதரர் விஸ்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகியோருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் பத்மநாபனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சக்திவேல் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.