Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான…. ஆக்கிரமிக்கப்பட்ட 5 கோடி நிலங்கள் மீட்பு….!!!!!

தஞ்சை அருகே இருக்கும் கத்தரிநத்தம் கிராமத்தில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் கந்தரி நத்தம் ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக 56.61 ஏக்கர் விளை நிலங்கள் இருக்கின்றது.

20 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த விளைநிலங்களை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த விளைநிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்பொழுது மீட்கப்பட்ட விளைநிலங்கள் அறநிலையத்திற்கு சொந்தமானதாகும். மேலும் இந்த இடத்தில் யாரேனும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கின்றது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 5 கோடியாகும்.

Categories

Tech |