கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காளகத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இதன் உப கோவிலாக திண்டுக்கல் பழநி சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான 355 சதுர அடி நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை மீட்குமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி துணை ஆணையர் அனிதா தலைமையில் கோவில் ஆய்வாளர்கள் சந்திரமோகன், சுரேஷ் ஆகியோர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை மீட்டு அதனை பூட்டி சீல் வைத்துள்ளனர்.