வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் ருக்மணி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். இதனையடுத்து குளிப்பதற்காக சென்ற ருக்மணி அறையிலிருந்த வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார்.
அப்போது திடீரென ருக்மணி மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.