Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன இடத்தில்…. பறிபோன இரண்டு உயிர்…. கதறும் குடும்பம்…!!

கோவிலுக்கு சென்ற சிறுவனும் சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பபடுத்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ஜெகன் (17) என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு அபிநயா (15) என்ற மகள்  இருக்கிறாள்.  இவர்கள்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு உறவினர்களுடன் வேனில் சென்றுள்ளனர். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவர்.இந்நிலையில்  அங்கு சென்ற இவர்கள் இக்கோயிலில் உள்ள சின்னமலை பாண்டவர் தீர்த்த குளத்தில் குளித்துள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக ஜெகன் மற்றும் அபிநயா இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அங்கிருந்த  பொதுமக்கள் அவர்களை மீட்க போராடினர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் சிக்கிய இருவரையும் பிணமாக மீட்டனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களது  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்குளத்தில் உரிய பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Categories

Tech |