Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு வந்த இடத்தில்…. கைவரிசையை காட்டிய மர்மநபர்…. சிறை தண்டனை விதித்து தீர்பளித்த நீதிபதி….!!

செல்போன் திருடியவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் சங்கர நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடி சென்று விட்டார். அந்த செல்போனின் மொத்த மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.

இது குறித்து சங்கரநாராயணன் கோவில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செல்போனை திருடியது வள்ளியூர் பகுதியில் வசிக்கும் சிங்கிதுரை என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிங்கிதுரையை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிங்கிதுரைக்கு 14 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |