Categories
அரசியல்

கோவிலை திறக்கணும்னா…. பாஜகவினர் இங்கே போராடக்கூடாது…. மனோ தங்கராஜ்…!!!

கோயில்களை திறக்க கோரும் பாஜகவினர் மத்திய அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவில் அடுத்த காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் புதிய பெட்டக வசதியை தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது , “கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு கொரோனா விதிமுறைகளை வகுத்து இருக்கிறது.

இதனடிப்படையில் தான் வழிபாட்டுத் தலங்களுக்கு இன்னும் வழிபாடு நடத்துவதற்கான உரிமை வழங்கப்படவில்லை. இதைக் காரணம் காட்டி கோவிலில் உள்ளே நுழைய விரும்புவது உண்மையிலேயே மதரீதியாக மக்களை பிரிப்பதற்காக அவர்கள் செய்கின்ற ஒரு அரசியல் சித்து விளையாட்டு. எனவே அந்த முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து அவர்கள் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தான் போராட்டம் நடத்த வேண்டும் ” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |