பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஆத்துக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் வீரனார் கோவிலை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலையும், அதற்கு சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெரிய ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகளுடன் பேசி கோவிலை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.