தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோவில்களுக்கு பல சிறப்பான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உழவாரப் பணிகள், இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை துவக்கி வைத்தார்.