Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கியிருந்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோணம்பட்டி விலக்கு அருகில் கடந்த 6 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூதாட்டி சிவகாசி-சாத்தூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |