நாம் கோவில்களில் எதற்காக மணி அடிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது கோவில்களில் நாம் கடவுளை வழிபடுவதற்காக தான் மணி அடிக்கிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மணி அடிக்கும் போது ஒரு நல்ல விதமான வைப்ரேஷன் உருவாகுமாம். இந்த வைப்ரேஷன் காரணமாக நம்முடைய உடம்பில் இருக்கும் வைரஸ்கள் அழிந்துவிடுமாம். இதனையடுத்து கோவில்களில் வைக்கப்படும் மணி சாதாரண உலோகத்தினால் உருவாக்கப்படுவதில்லை. அந்த கோவில் மணி மாங்கனீசு, குரோமியம், நிக்கல், தாமிரம், ஈயம், ஜின்க், கேட்மியம் உள்ளிட்ட உலோகத்தினால் செய்யப்படுகிறது.
மேற்கண்ட உலோகத்தினால் மணி செய்யப்பட்டிருப்பதால் நாம் ஒவ்வொரு முறை மணி அடிக்கும்போதும் இடது மற்றும் வலது மூளையில் ஒருவிதமான ஒற்றுமை உண்டாகும். இந்த மணி ஓசையில் இருந்து வரும் சத்தமானது நம்முடைய உடம்பில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் தொடும். இதன் காரணமாக மூளையின் செயல் திறனும், உணர்வு திறனும் தீவிரமடையும். மேலும் இதுபோன்ற அறிவியல் காரணங்களால் தான் நம்முடைய முன்னோர்கள் கோவில்களில் மணிகளை வைத்துள்ளனர்.