Categories
Uncategorized

கோவில்களில் சிறுவர் பூஜை…. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பரபரப்பு முடிவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீரமைக்கப்பட்டது.

இது குறித்து ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டு மண்டல குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது. மாநில குழு மற்றும் நீதி மன்றக் குழு ஆகியவை ஆய்வு செய்து அறிக்கை வெளிவந்த பிறகு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில்களில் சிறுவர்கள் பூஜை செய்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடிந்த பிறகு தமிழக முதல்வரின் ஒப்புதலோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |