தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், தமிழகத்தின் பல கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என ஏற்கனவே தீர்ப்புகள் உள்ளன. எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.