தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்கலாம் என்றும், பக்தர்கள் சாமி தரிசன செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில் திருவிழாக்கள் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடத்தவோ சாமி சிலையுடன் ஊர்வலங்கள் செல்லவோ அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோயில்களில் நடக்கும் திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் வார்த்தல் செய்யக்கூடாது. கோயில்களில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் 20 பேருக்கு மேல் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.