Categories
மாநில செய்திகள்

கோவில்களில் பெண் ஓதுவார்கள்…. அந்த 3 நாட்கள் எப்படி…? சிவசேனா கேள்வி…!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் வழங்கினார்.  இந்நிலையில் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் ஏற்கனவே உள்ளது. ஆனால் திமுக தான் புதிதாக கொண்டு வந்த திட்டம் போல இந்த விஷயத்தில் வீண் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

புதிதாக நியமித்துள்ள அர்ச்சகர்களால் ஏற்கனவே இருந்த அர்ச்சகர்களின் நிலை அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். பெண் ஓதுவார்கள் மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று நாட்கள் எப்படி ஆலயத்தில் பூஜை செய்ய முடியும்?. ஏற்கனவே காலத்தில் ஆலயங்களுக்கு தேவையான பூ மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கி தமிழக அரசு தற்போது இந்துக்களின் மனதை மேலும் புண்படுத்தி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |