Categories
மாநில செய்திகள்

கோவில்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார்…. நீதிபதி….!!!!

கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்திய ஊழியர் மீது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று  நீதிபதி எம் எஸ் சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி மத நம்பிக்கை உள்ளவர்களே  கோவில்களுக்கு வருகிறார்கள்.

கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. ஒற்றுமை கோவில்களில் ஏற்படும் விஐபி தரிசன முறைகள் சாதாரண பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவது  மிகுந்த வேதனையை அளிக்கிறது. கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் விஐபிகள் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். மேலும் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணியாளர்கள் மற்றும் போலீசார் போன்றோரை  உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் காவல்துறை, வருவாய்துறை, இந்து அறநிலையத் துறை சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.

Categories

Tech |