சென்னை வேப்பேரி p.k.n. அரங்கத்தில் கோவில்களை தலை மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும் விதமாக முன்னதாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார். இதற்கு முன்பாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதன்படி முடிதிருத்தும் பணியாளர்கள் 1744 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, பின்னர் மாதம்தோறும் 5,000 ஊக்கத்தொகையானது அந்தந்த கோயில்களில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டொன்றுக்கு ரூ.10.47 கோடி செலவிடப்படும். மேலும் இதன் காரணமாக இப்பணியாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.