Categories
தேசிய செய்திகள்

கோவில் மண்டபங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் – ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கோயில்களில் உள்ள மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 16 பெரிய கோவில்களின் மண்டபங்களில் தலா 1000 படுக்கைகள் கொண்ட மையமாக மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |