Categories
மாநில செய்திகள்

கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை… அரசாணை வெளியீடு…!!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நியாய  வாடகை நிர்ணயம் செய்யும்போது திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நியாய வாடகை நிர்ணயம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட அறிவுரைகள் வாடகை நிர்ணயம் குழுவால் நிர்ணயம் செய்யப்படும் வாடகை கணக்கீட்டு தாளுடன்  வாடகை தாரர்கள் அனுப்ப வேண்டும்.

அவர்களது ஆட்சியை பணிகளை பெற்று பரிசீலித்து இறுதியாக வாடகை நிர்ணய உத்தரவினை வாடகைதாரர்கள் வழங்கி ஒப்புதல் பெற வேண்டும். நியாய வாடகை நிர்ணயம் செய்வதற்கான வாடகை விவரம், சொத்து விவரம் ,சொத்தின் பரப்பளவு ,சொத்து வகைப்பாடு மற்றும் பயன்பாடு சொத்தின் மதிப்பு போன்றவை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட   நிறுவனத்தின் செயல் அலுவலர் அறங்காவலர் குழு தலைவர் அறிக்கை அனுப்பவேண்டும். முதன்முதலாக வாடகை நிர்ணயம் செய்து பொது இடத்தில் வாடகைக்கு விடப்படும். சொத்துகளுக்கு நியாய வாடகை நிர்ணய குழு மூலம் வாடகை நிர்ணயம் செய்ய உரிய உத்தரவை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல் அலுவலர் அறங்காவலர் குழு தலைவர் பிறப்பித்தால் மட்டுமே போதுமானது.

இணை கமிஷனர் இருந்து பெறப்பட்ட வாடகை கணக்கிடுதல் மற்றும் நியாய வாடகை நிர்ணயக் குழுவின் தீர்மானம் போன்றவற்றின் அடிப்படையில் வாடகைக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தொகையை குறிப்பிட வேண்டும். அது குறித்து ஆட்சேபனை ஏதும் இருந்தால் உரிய ஆதாரங்களுடன் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகள் தெரிவிக்கும்படி வாடகைதாரர்கள் வருகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பினை தீர்மானிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட சொத்து குறித்த விவரங்கள் மற்றும் வசூலிக்கப்படும் வாழ்க்கைக்கான ஆதாரம் பெறவேண்டும்.

அனைத்து கோவில் இணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் அனைவரும் கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்யும்போது, திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.  மேற்கண்ட உத்தரவுகள் அனைத்தையும் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் அரசாணையில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |