Categories
அரசியல்

கோவில்களை திறக்கவிட்டால்…. மக்களும், மகேசனும் தண்டிப்பாங்க…. சாபம் விட்ட ஹெச்.ராஜா….!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் 64வது பிறந்தநாள் விழா தனியார் மண்டபம் ஒன்றில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சாதிப் பிரச்சனையாக உருவாகி கலவரத்தை உண்டாக்குகின்றனர். இதற்காகவே சில அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக தமிழக அரசு ரவுடிகளை கைது செய்து வருகிறது.

தமிழகத்தில் பூங்காக்கள், தியேட்டர், மால்கள், பள்ளிகள் திறந்துள்ளன. ஆனால் இந்து கோவில்களில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் வழிபட அனுமதி மறுப்பது வேண்டுமென்றே இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கையாக உள்ளது. தமிழக கோவில்களில் மக்கள் வழிபட தடை விதித்துள்ளவர்களுக்கு மக்களும், மகேசனும் தண்டனை வழங்குவார்கள். குறிப்பிட்ட நாட்களில், வழிபட தடை என்ற அறிவிப்பை திமுக அரசு உடனே கைவிட வேண்டும், எல்லா நாட்களிலும் பொதுமக்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |