தமிழகத்தில் கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு பிறகு பௌர்ணமி தேய்பிறை ஆரம்பிப்பதால் திருமணங்கள் எதுவும் நடைபெறாது. அதனால் இன்று பெரும்பாலான திருமணங்கள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் இன்று 217 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணம் நடைபெற்றது. இதில் ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் 30 வகையான சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர், கோவில்கள் தனிப்பட்டவர்களின் சொத்துக்கள் அல்ல அது எப்போதும் மக்களுக்கானது எனக் கூறினார். மேலும் அறநிலையத்துறை இதுவரை 3700 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.