கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் கடலையூர் ரோடு பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார். இவரின் மனைவி பரணி செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சென்ற 29ஆம் தேதி மாலையில் ராஜபாண்டியும் பரணி செல்வியும் பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்கள். இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து இரண்டு பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இது குறித்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு செய்தி வெளியாகியது. ராஜபாண்டி புதிய வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருக்கின்றார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஆத்திரத்தில் ராஜபாண்டி பரணி செல்வி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் அறுத்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வருகின்றது. மேலும் இதற்கு வேறு காரணம் வேறு ஏதேனும் இருக்கின்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.