உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த 5 மாதங்களாக நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை…. கொரோனாவுக்கு எதிரான சிறப்பு சுகாதார தடுப்பு நடவடிக்கையால் தற்போது மீண்டு வருகிறது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடியும் ஓன்று.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது மக்களை வேதனை அடையச் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் உள்ள பிரபல தனியார் மில்லில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 56 தொழிலாளர்கள் உட்பட 85 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மி முழுவதும் தற்போது கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டு வருகிறது.