பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே பிணமாக இருந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராகவன் எப்படி இறந்தார்? இல்லை யாராவது கொலை செய்து விட்டார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.