Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவில் அருகே நின்ற இருசக்கர வாகனம்… திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

கோவில் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ராமர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள்  உடனடியாக நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் யாருடையது என்றும், எப்படி தீப்பிடித்தது என்றும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |