சேலம் மாவட்டத்தில் ராஜகணபதி கோவிலில் உண்டியலிலுள்ள காணிக்கையை எண்ணும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் 4 உண்டியல்கள் உள்ளது. அந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்காகற்காக கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமா தேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மேற்பார்வையில் கோவில் உண்டியலிலுள்ள காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து உண்டியல் காணிக்கையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 176 ரொக்கம், தங்கம் 8 கிராம் 100 மில்லியும், வெள்ளி 240 கிராம் மேலும் இரண்டாவது அக்ரஹாரத்தில் வைத்து இரண்டு உண்டியல்கள் எண்ணப்பட்டுள்ளன. அதில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 970 ரொக்கமும், தங்கம் 5 கிராமும்,வெள்ளி 45 கிராம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.