Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோவில் கட்ட அனுமதி வேண்டும்” கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் அப்பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணியை துவங்கியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 150 பேர் மாரியம்மன் கோவிலை பொது கோவிலாக அறிவிக்க வலியுறுத்தியும், விநாயகர் கோவிலை கட்ட அனுமதி வேண்டியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் கோவிலை கட்ட அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |