கோவில் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் இருக்கும் அரங்கூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக வாகையூரை சேர்ந்த கல்யாணி என்பவரும், அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் அன்னக்கொடி என்பவரும் வந்துள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்னக்கொடி, கல்யாணி ஆகியோரிடம் 8 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து இந்த 2 பெண்களும் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.