மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
மனவாளக்குறிச்சியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9 வரை பத்து நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்றது. மேலும் இந்தத் திருவிழாவில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்தும் எராளமான மக்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவுக்கு வந்தவர்கள் கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிலையில் இன்று மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலில் மீன பரணி விழா நடை பெற்றது .இதனை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.