Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்குதல்…. 3 பேர் காயம்; 10-க்கும் மேற்பட்ட பறவைகள் இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரணம்பட்டியில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பயங்கர சித்தத்துடன் மின்னல் தாக்கியதால் விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த 2 சாமி சிலைகள் சேதமடைந்தது.

மேலும் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிபாரதி, ஐயப்பன், பிரசாத் ஆகிய 3 பேருக்கும் கை, கால்கள், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதோடு, அருகில் இருந்த மரங்களில் அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்ட காகம், குருவி உள்ளிட்ட பறவைகள் இறந்து கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |