நடிகை சமந்தா காதல் கணவர் நாக சைதன்யாவின் பிரிவுமற்றும் அவரைப்பற்றி அடுக்கடுக்காக வந்த வதந்திகள் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மன அமைதி வேண்டி நடிகை சமந்தா தனி ஹெலிகாப்டரில் ஆன்மிக சுற்றுலா செய்து வருகிறார். இதில் முதல் பயணமாக தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியுடன் சேர்ந்து இமயமலை அருகில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷிற்க்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.
அங்குள்ள சாமியார்கள் உடன் பூஜையில் கலந்துகொண்ட வீடியோ புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.