தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவில் நிலங்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
அதன்படி பல ஏக்கர் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் இருப்பதாக அரசுக்கு தெரியவந்ததையடுத்து இதுபோன்ற வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்தும் வெளியேறாமல் இருப்போர் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.